அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அதிரடிக் காட்டக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ள அவர்கள், ஆளுங்கட்சில் இருந்து வெளியேறி இன்று எதிரணி பக்கம் அமர்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.