வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச மற்றும் மாகாண அரச உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இதுவரையில் தீர்வு காணப்படாத ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முகாமைத்துவ சேவை அதிகாரிகளின் தேசிய சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கூட அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தீர்வு கிடைக்கும் வரை தமது எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அந்த குழுவின் செயற்குழு உறுப்பினர் ரோஹித செனவிரத்ன தெரிவிததுள்ளார்.