வெல்லம்பிட்டிய, கொஹிலவத்தை பிரதேசத்திற்கு அருகில் உள்ள களனி ஆற்றில் காதலியை கொன்று சடலத்தை வீசிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் தனது காதலியை கம்பஹா, தொரணகொடவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெல்லம்பிட்டிய சேதவத்தையில் பிரதேசத்தை 22 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தமது மகள் காணாமல் போயுள்ளதாக யுவதியின் பெற்றோர் மற்றும் சந்தேக நபரும் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், வெல்லம்பிட்டிய மற்றும் பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.