ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய உறவு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நட்பு ரீதியான இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுக்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.