follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுசர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவிப்பு!

சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவிப்பு!

Published on

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது என்பதனால் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ளபோதும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து கலந்துரையாட தொடர்ந்தும் தயக்கம் காட்டுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என கூறி உறவுகளின் வேதனையுடன் அரசாங்கம் விளையாடியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தினை திருத்துவதாக கூறினாலும், நீண்டகாலத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாது தடுத்து வைக்கும் முறையினை கைவிடும் எண்ணம் இந்த அரசாங்கத்திற்கு இல்லை என்றும் கஜேந்தரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தற்போதைய நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மீது அனைத்து மக்களும் வெறுப்பினை வெளிப்படுத்திவரும் சூழலில் மாநாட்டில் பங்கேற்பதானது வீழ்ச்சி கண்டிருக்கும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு மீண்டும் புத்திதுயர் அளிப்பதாக மாறிவிடும் என கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (18)...

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக வன்னி மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திற்கான...

பல வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் முடக்கம்

அரச வைத்தியசாலைகள் அமைப்பில் தற்போது மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக இலங்கையிலுள்ள எட்டிற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்கச்...