எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் போக்குவரத்து சேவை ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்தப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண அதிகரிப்பு எரிபொருள் விலையினை முகாமைத்துவம் செய்யும் வகையில் அமையாது எனவும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும் தற்போது, 20 சதவீதமான அளவு பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுப்படுத்தப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் பேருந்து சேவையினையும் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.