இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாக இந்நாள், முன்னாள் ஐரோப்பிய அரசியல்வாதிகள் பலர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறைக்கான காலத்தை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 முதல் 10-ந் திகதிக்குள் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்படும்.