இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 600 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 260 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுக்கு அறிவிக்கபட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.