பசறை -நமுனுகுல 10 ஆம் மைல்கல் பிரதான வீதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்;
பண்டாரவளையிலிருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் ஒன்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த பாடசாலை சேவை பேருந்தும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் தனியார் பயணிகள் பேருந்து சாரதி உட்பட அறுவர் காயங்களுடன் பசறை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.