follow the truth

follow the truth

October, 18, 2024
HomeTOP1தற்போதைய நெருக்கடிக்கு நாம் காரணம் அல்ல என்கிறார் மஹிந்த

தற்போதைய நெருக்கடிக்கு நாம் காரணம் அல்ல என்கிறார் மஹிந்த

Published on

போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஆட்சியினை கவிழ்க்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியைக் கவிழ்க்க எதிரணியினர் படாதபாடுபடுகின்றனர். அவர்கள், தமது ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்து ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட வைத்துள்ளனர். இதனால் என்ன பயனை அவர்கள் அடைந்தார்கள் எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிரணியினர், ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில், 69 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதை எதிரணியினர் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல. தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர்.

அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்கின்றோம். இதை எமக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் மக்களும் புரிந்துகொள்வார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைவில் தீர்வு காணப்படும். ஜனாதிபதி இதில் உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எல்பிட்டியவில் தபால் மூல வாக்குகளை குறிக்கும் மேலதிக நாள் இன்றாகும்

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் மேலதிக நாள் இன்று (18) செயற்படுகின்றது. கடந்த 14ஆம்...

பொதுத் தேர்தல் வேட்பாளர்களுக்கான விசேட அறிவிப்பு

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது செலவு மற்றும் வருமானப் பதிவேடுகளைப் பேணுவதற்கு தனி நபரை நியமிப்பது பொருத்தமானது...

HPV தடுப்பூசி செலுத்திய 05 மாணவிகள் வைத்தியசாலையில்

களுத்துறை - அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5...