மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இது தொடர்பில் கவனம்செலுத்தப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டதுடன், கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்கமைய இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார்.