பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) பதுளை மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றம் குற்றவாளித் தீர்ப்பை வழங்கியதுடன், அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது.
பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
