முதலீட்டு ஊக்குவிப்பு சபைக்கு சொந்தமான தொழிற்சாலைகளுக்கு இதன் பின்னர் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
முதலீட்டு சபையின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவுடன் நேற்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.