ஜனவரி மாதம் முதல் அரச பாடசாலைகளின் நீர் கட்டணத்தை மாணவர்களின் பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த ஆண்டு முதல் குடிநீர் கட்டணத்திற்கு அரசாங்கம் நிதி வழங்காது என அனைத்து பாடசாலைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாடசாலை குடிநீர் கட்டணத்தை பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதால் கடும் நெருக்கடி ஏற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.