நாட்டில் இன்றும் மின்விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய,P,Q,R,S,T,U,V,W வரையிலான வலயங்களில் மாலை 5 முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L வரையிலான வலையங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையிலான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.