இந்தியாவின் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் உள்ள பரௌம் பகுதியில் இந்திய இராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஹெலிகாப்டர் பனி படர்ந்த பகுதிக்குள் பறந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டருக்குள் இருந்தவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.