நாட்டில் உள்ள அனைத்து மருந்துகளின் விலைகளையும் 29% அதிகரிக்க மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளின் விலைகளும் புதிய திருத்தப்பட்ட விலையின் கீழ் விற்பனை செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் மருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.