அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டெல்டா பிறழ்வு அச்சத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த வாரத்தில் நோய்த்தொற்றுகள் இருமடங்காக அதிகரித்துள்ளதுடன், நேற்றைய தினம் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், அடுத்த மாதம் இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.