லிட்ரோ எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லபார் தாஹிர் மற்றும் எஸ்.யூ.பீ.கரலியத்த ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புக் கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோருக்கு உத்தரவிடுமாறு குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.