follow the truth

follow the truth

January, 16, 2025
Homeஉள்நாடுஅரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு.

Published on

பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் முக்கிய நகர அபிவிருத்திப் பணிகளை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைசார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிட்டுள்ளது.

இதன் முதற்கட்டத்தின் கீழ், காலி, பண்டாரவளை, இரத்தினபுரி நகர மத்தி மற்றும் திம்பிரிகஸ்யாய, கோட்டை, புறக்கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய விசேட பொருளாதார வலயங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

பசுமை நகர எண்ணக்கருவுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து வசதிகளுடன் கவர்ச்சிகரமானதாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விசாலமான சாலைகள், வாகனத் தரிப்பிட வசதிகள், நடை பாதைகள், வர்த்தக வளாகங்கள் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் விளக்கு அமைப்புகள் போன்ற பல வசதிகள் இப்புதிய திட்டத்தில் அடங்குகின்றன.

திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, குறித்த நகரங்களைச் சூழவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பதுடன், பொதுமக்களைக் கவரும் வகையில் பழைய கட்டிடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகப் புகழ்பெற்ற சீன நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து...

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த நிவாரணப் பொதி

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நிவாரணப்...

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா அதிகபட்ச ஆதரவை வழங்கும் – சீனப் பிரதமர்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா பிரதமர் லீ சியாங்...