உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்திருந்த நிலையில், Mariupol ல் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.