follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉள்நாடுசசி வீரவன்சவின் கடவுச்சீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று

சசி வீரவன்சவின் கடவுச்சீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று

Published on

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தொடர்பான கடவுச்சீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு தவறான தகவல்களை சமர்ப்பித்து போலி இராஜதந்திர கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அவருக்கு எதிரான இரண்டு வழக்குகள் அண்மையில் தொடரப்பட்டன.

அதன்படி, கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகலா பெப்ரவரி 10ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்தார்.

திருமதி ஷஷி வீரவன்ச 1967 ஆம் ஆண்டு பிறந்ததாகவும் ஆனால் அவரது பிறப்புச்சான்றிதழில் 1971 என பிறந்த திகதியை மாற்றியதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

அதற்கமைய திருமதி ஷஷி வீரவன்ச ,குறித்த இரண்டு பிறந்த நாட்களிலும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...