வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.
சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாட்டில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணத்தை ரூபாவாக மாற்றும் போது, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு மேலதிக ஊக்குவிப்புத் தொகையாக ரூ. 20 வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.