ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உரையாற்றும் நேரம் மற்றும் திகதி பின்னர் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கொவிட் 19 நிலைமை தொடர்பில் நாட்டை முடக்குவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி இதன்போது வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.