இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியுடன் சிவப்பு அரிசியை கலந்து சிவப்பு, பச்சை அரிசியாக சந்தைக்கு விநியோகிக்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இரத்தினபுரி நுகர்வோர் சேவை அதிகாரிகளினால் அதுதொடர்பான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன.
எம்பிலிப்பிட்டிய, துன்கம மற்றும் மொரக்கெட்டிய ஆகிய பிரதேசங்களில் குறித்த அரிசி ஆலைகள் நடத்திச்செல்லப்பட்டுள்ளதுடன், அரிசி ஆலைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் அதன் உரிமையாளர்கள் இருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் அரிசி அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை பெறப்பட்டதன் பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.