அத்தியாவசியமற்ற 367 பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதை பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக குறுகிய காலத்திற்கு இறக்குமதிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் பரிந்துரைக்கமைய இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு மூன்று வகையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்கள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்தான அறிவித்தலில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார்.
முதலாவது நடைமுறைக்கமையஇ சில தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களுக்கு வரி அறவிடப்படும்.
இரண்டாவது நடைமுறைக்கமையஇ சில தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதிப் பொருட்களை இறக்கமதி செய்ய அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது நடைமுறைக்கமையஇ சில தெரிவுசெய்யப்பட்ட பொருட்களுக்கு வரி விதிக்கவும்இ அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த 367 பொருட்களை இறக்குமதி செய்ய நேரடியாகவும்இ முறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்ட பொருட்கள் பட்டியலை இங்கே பார்வையிடலாம்.