நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு இருப்பதாகக் கூறி சிங்கள, தமிழ் புத்தாண்டுக் காலத்தில் விலையை உயர்த்துவதற்கு பல நிறுவனங்கள் தயாராகி வருவதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தேங்காய் எண்ணெய் இருப்புக்களை மறைக்க பெரிய அளவிலான நிறுவனங்கள் ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளன என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சந்தையில் தற்போது நிலவும் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பொது அழைப்பாளர் புத்திக டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.