பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அந்த பகுதியில் இருந்து தலைமறைவாகியிருந்தார்.இந்நிலையில், பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.