எதிர்வரும் 2 வாரங்களில் நாடு முழுவதும் அரச துறையில் மட்டுமன்றி தனியார் துறையிலும் அத்தியாவசிய ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் குறைவடைந்துள்ளது என அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் ஒளடத தட்டுப்பாடு ஏற்படாது எனவும் 4 மாதங்களுக்கான ஒளடதங்கள் களஞ்சியத்தில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது