கொழும்பிலிருந்து கதிர்காமம் வரை பயணிக்கும் அனைத்து மாகாணங்களுக்கிடையிலான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பஸ்களில் GPS கருவிகளை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக வீதி விதிமுறைகளை மீறும் பஸ்களை அடையாளங்காண முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார்.