follow the truth

follow the truth

April, 16, 2025
Homeஉள்நாடு3,500 மெற்றிக் டொன் எரிவாயுவை இன்று தரையிறக்க நடவடிக்கை - லிட்ரோ நிறுவனம்

3,500 மெற்றிக் டொன் எரிவாயுவை இன்று தரையிறக்க நடவடிக்கை – லிட்ரோ நிறுவனம்

Published on

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் இருந்து 3,500 மெற்றிக் டொன் எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை இன்று ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிதியமைச்சிடமிருந்து 15 மில்லியன் டொலர் நிதி வழங்கப்பட்டதை அடுத்து,  கொழும்பு துறைமுகத்தில் கடந்த பல நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ள 3 கப்பல்களுள், 2,600 மெற்றிக் டொன் எரிவாயு தாங்கிய கப்பலிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் நேற்று இடம்பெற்றன.

நாடுமுழுவதும் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது தொடர்ச்சியாக இடம்பெறுகின்றமையினால், தற்போது நாட்டில் நிலவும் எரிவாயு பற்றாக்குறை கிரமமாக நீங்கி வருவதாக அறியமுடிகின்றது.

எவ்வாறிருப்பினும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள எரிவாயு விற்பனை நிலையங்களில் நேற்றைய தினமும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

எரிவாயு இன்மை காரணமாக நாட்டின் பல பாகங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுணவகங்களில், உணவு தயாரிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் ,எரிவாயு தட்டுப்பாட்டுக்கு மத்தியில் பொதுமக்கள் உணவு தயாரித்தல் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்தும் நிலையில், சந்தையில் மண்ணெண்ணய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீட்டின் 2ம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த சிறுவன் – விசாரணை ஆரம்பம்

வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த...

அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிக்க விசேட நடவடிக்கை

போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால்...

வாக்காளர் அட்டைகள் நாளை தபால் திணைக்களத்திடம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தலுக்கான...