இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்வெட்டு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் இரண்டரை மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணிநேரமும் மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.