follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுகொத்து ரொட்டிக்கு காப்புரிமையை இலங்கை பெறவேண்டும்

கொத்து ரொட்டிக்கு காப்புரிமையை இலங்கை பெறவேண்டும்

Published on

கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

இத்தாலியில் உள்ள பீட்சா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹாம்பர்கர்கள் போன்ற பிற நாடுகளின் பூர்வீக உணவுகளுடன் கொத்துரொட்டியை ஒத்ததாக மாற்றுவதற்கு இலங்கை செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் பூர்வீக உணவுகளுக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக இதனைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் நாட்டின் ஏற்றுமதித் துறையை மேம்படுத்துவதுடன் இலங்கைக்கு சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என கலாநிதி ஹேரத் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...