follow the truth

follow the truth

November, 3, 2024
Homeஉள்நாடுஅமைச்சர் பந்துல ஓமான் தூதுகுழுவினரிடம் விடுத்துள்ள கோரிக்கை

அமைச்சர் பந்துல ஓமான் தூதுகுழுவினரிடம் விடுத்துள்ள கோரிக்கை

Published on

ஓமான் நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவருக்கும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் ஓமான் நாட்டுக்குமிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் இலங்கையின் தேசிய உற்பத்திகளுக்கு ஓமான் நாட்டு சந்தையின் முன்னுரிமை வழங்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஓமான் தூதுகுழுவினரிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான வர்த்தக உறவினை பலப்படுத்துவது அவசியமாகும். எனவும் இலங்கையின் தேசிய உற்பத்திகளுக்கு ஓமான் நாட்டு சந்தையில் முன்னுரிமை வழங்குமாறு அமைச்சர் இதன்போது தூதுகுழுவினரிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் தேசிய உற்பத்திகளை ஓமான் முழுவதும் சந்தைப்படுத்த வேண்டுமாயின் ஓமான் நாட்டில் இலங்கையின் தேசிய உற்பத்திகளை இவ்வருட காலப்பகுதிக்குள் முழுமையாக காட்சிப்படுத்த வேண்டும் என ஓமான் நாட்டின் வணிகம் மற்றும் கைத்தொழில் சபையின் தலைவர் ரேடா ஜூமா அல்-சலி குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்குமையிடையிலான வர்த்தக உறவை விரிவுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை திருத்தியமைக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமாவதால் ஏற்படும் பாதிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என...

மழையுடனான வானிலை – அதிக வேகத்தில் பயணிக்க வேண்டாம்

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் இந்நாட்களில் மிகக்கவனமாக செயற்பட வேண்டும் என வீதி...

வாகன இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தம்

இலக்கத் தகடுகளை அச்சடிக்கும் நிறுவனத்திற்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வாகன இலக்கத் தகடு விநியோகம் தற்காலிகமாக...