follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடு“ஒரே நாடு - ஒரே சட்டம்” - சபாநாயகர், பாராளுமன்ற பொதுச் செயலாளர் சந்திப்பு

“ஒரே நாடு – ஒரே சட்டம்” – சபாநாயகர், பாராளுமன்ற பொதுச் செயலாளர் சந்திப்பு

Published on

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை நேற்று (07) சந்தித்துள்ளது.

செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் எண்ணக்கரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இன மற்றும் மத குழுக்களாக, எந்தவொரு வகையிலும் எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக் கூடாது என்பதை தேசியக் கொள்கையாக சட்டமாக்குவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

சமீபத்தில் அதன் பதவிக்காலம் 2022-02-28இல் இருந்து 03 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டது. செயலணியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு ஏற்ப பல்வேறு தொழில் வல்லுநர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பல்வேறு மதக் குழுக்கள், பல்வேறு இனத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் தபால், மின்னஞ்சல் மூலமும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள செயலணியின் அலுவலகத்திற்கு வருகை தந்து, அவர்களின் கருத்துக்களை வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் முன்வைத்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...