தெரிந்தோ தெரியாமலோ யாராவது ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் இதனால் பேரிழப்பு ஏற்படும் எனவும் இதன் காரணமாகவே அமைச்சர்கள் இருவரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்தாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களானாலும், இராஜாங்க அமைச்சர்களானாலும் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எதிர்க்கட்சியில் இருந்து செய்தவற்றையே தற்போதும் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் சஜித் மற்றும் அநுர ஆகியோர் நாட்டில் எரிபொருள் இல்லை என கூறிய குழப்பத்தை ஏற்படுத்தியமையினாலேயே மக்கள் தற்போது வரிசையில் நிற்பதாக கூறினார்.
நாட்டுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்றும் மீண்டும் ஒருமுறை எரிபொருள் பிரச்சினை ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் உறுதியளித்தார்.