இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிசந்திர அஷ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.
அதனடிப்படையில் இந்தியா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது