பிரதான நகரங்களில் பஸ்களுக்கு மாத்திரம் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை அமைக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
தனியார் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் பாரிய அளவில் சேவையில் ஈடுபடுவதில்லை எனவும், இதனால் பயணிகளே பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை சீர் செய்வதற்காக அரசாங்கம் பிரதான நகரங்களில் தனியார் பஸ்களுக்காக பிரத்தியேக எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
மிக விரைவில் டீசலை பெற்று தருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன ப்ரியஞ்ஜித் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கான டீசலை வழங்குவதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.