வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மனித உரிமைகள் பேரவையின் தலைவரும் ஆர்ஜென்டினாவின் நிரந்தரப் பிரதிநிதியுமான ஃபெடரிகோ வில்லேகாஸை ஜெனிவாவிலுள்ள பலாஸ் டெஸ் நேஷன்ஸில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அவருடன் நீதி அமைச்சர் அலி சப்ரி, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இணைந்திருந்தனர்.