தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்துகிறது.
மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் முன்னோக்கி செல்வது தற்போது சவாலாக உள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
அத்தோடு மழைநீர் இல்லாத காரணத்தால் சில நீர்மின் மின் உற்பத்தி நிலையங்களை நடத்திச்செல்வது கடினமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய மின்சார நிலையங்களுக்கு தேவையான எண்ணை வகைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்காத பட்சத்தில் மேலும் நெருக்கடிகள் உருவாகலாம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.