ரஷ்ய படையினரின் தாக்குதலுக்கு பின்னர் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அணு உலையின் கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களால்” இது ஏற்பட்டிருக்கிறது என்று ஜபோரிஜியாவின் அருகிலுள்ள நகரமான எனர்கோடரின் மேயர் கூறியுள்ளார்.
உக்ரேனின் தலைநகரான கிய்வ் இல் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் உள்ள செயலிழந்த செர்னோபில் அணு ஆலையை ரஷ்யா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது.