அங்காரா மற்றும் வோர்சாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்ந்தும் நெருக்கமாகத் தொடர்புகளைப் பேணி வருகின்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, உக்ரேனில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் / மாணவர்கள் பாதுகாப்பான பாதையில் செல்வதற்கும், அவர்களை வெளியேற்றுவதற்கும் வசதிகளை வழங்கி வருகின்றது.
பதினேழு இலங்கைப் பிரஜைகள் போர் தொடங்குவதற்கு முன்னரே உக்ரேனில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதுடன், அதன் பின்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அங்காரா மற்றும் வோர்சாவில் உள்ள அதன் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் இணைந்து, உக்ரேனிலிருந்து மேலும் 32 இலங்கையர்களை போலந்து எல்லை வழியாக வெளியேற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
போலந்து வழியாகத் திரும்புவதற்காக போலந்து எல்லைக்குச் செல்லும் உக்ரேனில் எஞ்சியிருக்கும் இலங்கைப் பிரஜைகள், வோர்சா அல்லது அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளை பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தொலைபேசி: (வோர்சோ) +48 795 031 376, +48 536 229 694;
(அங்காரா) +90 534 456 94 98, +90 312 427 10 32