தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து கொண்டு அடுத்த சில நாட்களில் (மார்ச் 04 மற்றும் 05ஆம் திகதி) மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்ததாக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கடற்பிராந்தியங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதுடன், கொந்தளிப்பாகவும் காணப்படுமென எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
மேலும், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையிலான கடற்பிராந்தியங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.