குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்மேற்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடைந்து கொண்டு மேற்கு – வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்ததாக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.