கடந்த டிசம்பர் 03ஆம் திகதி நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்பட்டமை குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த விசாரணைகளுக்கு தகவல்களை சேகரிப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை 8.30 முதல் மாலை 4.30 வரை பொதுமக்கள் தமது கருத்துக்களைப் பதிவுசெய்ய முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.