கொழும்பு – புறக்கோட்டை – இரண்டாம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை சில தினங்களுக்கு மூட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றமையை கருத்திற் கொண்டே, தாமும் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக அந்த பிரதேச வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கொழும்பு – கெய்சர் வீதி, கொழும்பு – 12 பகுதியிலுள்ள இரும்பு மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் முடப்பட்ட நிலையில் , இன்று இரண்டாம் குறுக்குத் தெருவும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.