இரண்டு வருடங்களின் பின்னர் அதிகளவான சுற்றுலா பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
96,507 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் வருகை தந்துள்ளனர்.
2020ம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் நாட்டுக்கு அதிகளவான சுற்றுலா பயணிகள் கடந்த பெப்ரவரி மாதத்திலேயே வருகை தந்துள்ளார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் 82, 327 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மொத்தமாக ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 495 பேரே வருகை தந்துள்ளனர்.
ரஷ்யாவிலிருந்தே 28,818 பேர் சுற்றுலா பயணிகளாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதத்திலிருந்து நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரித்துள்ளதாகவும் சுற்றுலா துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.