இலங்கை அணியின் இளம் வீரர் பத்தும் நிசங்க, ஐ.சி.சி. ஆண்களுக்கான இருபதுக்கு இருப்பது துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான இருபதுக்கு இருப்பது தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், 654 புள்ளிகளுடன் தரவரிசையில் 6 இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்திய தொடரை தவறவிட்ட இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவும் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை.