உயர்க்கல்வியை மேற்கொள்வதற்காக பெலாரஸ் சென்றுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) பணிப்புரை விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலக ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் இடம்பெற்று வருவதோடு, குறித்த போரில் பெலாரஸ் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருவதன் காரணமாக, அங்குள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதமர் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.