follow the truth

follow the truth

November, 28, 2024
Homeஉள்நாடுபசிலின் உறுதிமொழியை மீறி இந்த மாதம் 10 மணி நேர மின்வெட்டு

பசிலின் உறுதிமொழியை மீறி இந்த மாதம் 10 மணி நேர மின்வெட்டு

Published on

திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மார்ச் 5 ஆம் திகதிக்கு பின்னர் மின் நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார். ஆனால் நாட்டில் டீசல் ,பெற்ரோல் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ள நிலையில் அதனை எவ்வாறு மேற்கொள்வார் என அரசாங்கத்திற்குள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இலங்கையில் தற்சமயம் பெட்ரோல் ஏழு நாட்களுக்கும், டீசல் நான்கு நாட்களுக்கும் மட்டுமே கையிருப்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், எரிபொருள் கப்பல் இன்று கொழும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நாட்டில் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் நிற்கும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்புகளில் எரிபொருளை விநியோகிக்குமாறு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஒரு நபருக்கு 3000 ரூபாய்க்கு மேல் எரிபொருள் நிரப்ப வேண்டாம் என பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியில் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் நடுப்பகுதியில் தற்போதைய மின்வெட்டு 10 மணிநேரமாக உயரும் என்றும் விரைவில் மின்சார விநியோக நேரம் வெளியிடப்படலாம் என்றும் CEB பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க மழை மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம் ஒன்றே ஒரே வழி என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட...

மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல...

வெள்ளத்தில் அடித்துச் சென்ற உழவு இயந்திரம் – இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு

காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள்...